ஆபத்தான பள்ளம்

Update: 2023-03-26 07:45 GMT

ஆரல்வாய்மொழி வடக்கூர் பேரூராட்சி 2-வது வார்டு பகுதியில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதை சரியாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூதலிங்கம், ஆரல்வாய்மொழி 

மேலும் செய்திகள்