விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீடூர் அணைக்கட்டு கூட்டு சாலை பகுதியில் தடுப்பு கட்டை உள்ளதால் வீடூர் அணை செல்ல வெகுதூரம் சென்று திரும்பி அணைக்கட்டு கூட்டு சாலை வந்து, செல்ல வேண்டியுள்ளது. வீடூா் அணை கூட்டு சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையை நீக்கினால், அந்த வழியாக சுலபமாக வீடூர் அணை செல்ல முடியும். எனவே அந்த தடுப்புக் கட்டையை நீக்கி அந்த வழியாக வாகனங்கள் செல்ல ஏதுவாக வழித்தடம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.