கோவை சுங்கம் பைபாஸ் சாலை சேதம் அடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் உள்ள குழியில் சக்கரம் ஏறி இறங்கும்போது தவறி கீழே விழந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.