தர்மபுரி இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே தொடங்கும் கான்கிரீட் சாலை வி.பி.சிங் தெரு வழியாக ெரயில்வே தண்டவாளம் வரை செல்கிறது. இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.