சாயர்புரத்தில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்குள்ள ஆஸ்பத்திரி அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து, ஆஸ்பத்திரி அருகில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.