குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-15 18:23 GMT
கிள்ளை அருகே வெள்ளாற்று பாலத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்