வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-12 14:48 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி-டோல்கேட் சாலையில் உள்ளது தாளக்குடி. இந்த சாலையில் பலதரப்பட்ட மக்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் நிறைய விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள பள்ளிவாசல் அருகே வேகத்தடை அமைத்தால் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும். மேலும், வாளாடியில் உள்ள உயர்நிலைப்பள்ளி அருகேயும் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்