கோவை கணபதி லெனின் நகரில் சாக்கடை கால்வாய் குழி மீது சாலையில் நடுவில் மூடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மூடி தற்போது உடைந்துவிட்டது. இதனால் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. மேலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுவதால், அந்த வழியாக நடந்து சென்று வருபவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே புதிய மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.