விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கக்கன் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்றன. இதனால் அங்குள்ள சாலை, குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?