சாத்தான்குளம் தாலுகா முதலூரில் இருந்து அடையல் கிராமம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.