தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் மேற்கு பகுதியில் தர்மபுரி- சேலம் ரெயில் பாதை அமைந்துள்ளது. இங்கு தண்டவாளத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சுரங்க பாதையை நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வரும் இந்த சுரங்கப்பாதையை கனரக வாகனங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி நகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதையை விரிவுபடுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.