சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காடம்பாடி ஊராட்சி செங்கத்துறை கிராமத்தில் இருந்து மாதப்பூர் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.