பழுதடைந்த சாலை

Update: 2023-03-05 16:09 GMT

தர்மபுரி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை ஒட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்ல வரும் லாரிகள் இந்த சர்வீஸ் சாலை வழியாக வந்து செல்கின்றன. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் சரக்கு வாகனங்கள் தடுமாறியபடி சென்று வருகின்றன. எனவே பழுதான சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்