சாலையை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-03-05 16:08 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த சாலையில் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சில நேரங்களில் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்