திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் ஆதிச்சபுரம் மாரியம்மன் கோவில் அருகே சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக சாலையின் நடுவே, ஓரத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் சாலை உள்வாங்கி காணப்படுகிறது. இதனை அறியாமல் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?