குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-03-05 11:07 GMT

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கூட்டுறவு பயிற்சி மையம் , மருத்துவக்கல்லூரி, நீதிமன்றம், கல்வித்துறை அலுவலங்கள் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்