திருவாரூர் மாவட்டம் 54.நெம்மேலி கிராமத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் மெயின் சாலை பொதுமக்கள், மாணவ-மாணவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வழித்தடமாகும். ஆனால் இந்த சாலை மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.