கரூர் வெள்ளியணை சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவிலிருந்து கிழக்கே காத்தாளப்பட்டி, செல்லிபாளையம், சின்னத்தம்பிபாளையம் வழியாக உப்பிடமங்கலம் செல்லும் தார் சாலையானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் தற்போது அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலை சரியாக பராமரிக்கப்படாமையால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.