தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்து செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே டவுன் பஸ் நிலையத்தில் சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.