திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த புத்தூர் மலைக்கிராமம் முதல் நச்சிலிப்பட்டி மலைக்கிராமம் வரை செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் சாலை மிகவும் சேதமுற்று போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பூதக்கால், நச்சிலிப்பட்டி, கருவங்காடு ஆகிய மலை கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் புத்தூர் செல்லாமல் நேரடியாக தங்கள் கிராமங்களுக்கு இந்த குறுக்கு சாலை வழியாக செல்லலாம். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து தர கேட்டுக்கொள்கிறோம்.