திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு சாலை, திருச்சி சாலை மற்றும் நத்தம் சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு வாகனங்கள் செல்வதால் இந்த மேம்பாலங்களில் உள்ள சாலையின் இருபுறமும் மணல் மற்றும் குப்பைகள் குவியலாக சேருகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மணல் மற்றும் குப்பைகளை அகற்ற திண்டுக்கல் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.