நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாவூர்சத்திரம் தபால் நிலையம் முன்பும் பள்ளம் தோண்டி சாலை விரிவாக்கம் செய்தனர். தொடர்ந்து தபால் நிலையம் முன்பாக பள்ளத்தை சரிவர மூடாமல் சென்று விட்டனர். இதனால் தபால் நிலையத்துக்கு பொதுமக்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே தபால் நிலையம் முன்புள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.