கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக கோ-ஆப்ரேட்டிவ் காலனி, வெஸ்ட் லிங்க் ரோடு, கே.தியேட்டர் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்துள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்யநாராயணன், கிருஷ்ணகிரி.