பண்ருட்டி தாலுகா வல்லம் பஸ் நிறுத்தத்தில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு சாலையில் வேகத்தடை இல்லாததால், அந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வல்லம் நான்கு முனை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.