போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-19 17:04 GMT

ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானா பகுதியில் இருந்து ஏரி தெருவழியாக பழைய பெங்களூர் சாலை செல்லும் பகுதி வரை நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். ஏரி தெரு பகுதியில் தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள். வியாபார நிறுவனங்களும் உள்ளன. இதனால் இந்த சாலையில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் காணப்படும். காலை முதல் இரவு வரை எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதால், அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த போக்குவரத்து நெரிசல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்