திண்டுக்கல் பெரியக்கோட்டை அருகே உள்ள கோம்பையான்பட்டியில் இருந்து புகையிலைப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.