விக்கிரவாண்டி ஒன்றியம் சின்னதச்சூர்-எசாலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கரடு, முரடான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.