அவதிப்படும் வாகன ஓட்டிகள்

Update: 2023-02-15 17:52 GMT

பழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆயக்குடி குறிஞ்சிநகர் 3-வது தெருவில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில், நெடுஞ்சாலையுடன் இணையும் இடத்தில் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அந்த இடத்தில் உள்ள தரைப்பாலம் நெடுஞ்சாலையைவிட சற்று உயரம் கூடுதலாக இருப்பதால் சாலையை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இணைப்பு சாலையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்