நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியை அடுத்த கரியாம்பட்டி காந்திநகர் தெருவில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.