தர்மபுரி நகராட்சி பள்ளியின் கிழக்கு பகுதியில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள தார் சாலையில் இந்த பகுதியில் உள்ள கடைகள் வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே இந்த பகுதியில் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.