வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-02-15 12:21 GMT
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பர்கூர் நகருக்கு செல்லும் சாலையில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாத காரணத்தால் வாகன ஓட்டிகள் பலருக்கும் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதனால் பலரும் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் இரவு நேரங்களில் அந்த இடத்தில் கீழே விழும் நிலை உள்ளது. எனவே பர்கூர் நகருக்குள் செல்லும் பாதையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசவும், ஒளிரும் விளக்குகள் பொருத்திடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்