ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2023-02-12 17:32 GMT

திருச்சி மாநகராட்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள மேட்டுத்தெரு மெயின் ரோட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்