ஒளிபிரதிபலிபான்கள் அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 16:44 GMT

தர்மபுரி- சேலம் சாலையில் அதிக வாகன போக்குவரத்து கொண்ட பகுதியாக இலக்கியம்பட்டி உள்ளது. இங்கு காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கானோர் சாலைகளை கடக்கிறார்கள். இந்த பகுதியில் சாலையில் 2 பக்கங்களிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த பகுதியில் வேகமாக வரும் பல வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே இங்குள்ள 2 வேகத்தடைகளிலும் ஒளி பிரதிபலிப்பான்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்