தேனி-பூதிப்புரம் இடையேயான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையை காரணம் காட்டி அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ், ஆட்ேடா, கார் உள்ளிட்ட வாகனங்கள் பூதிப்புரத்திற்கு வருவதில்லை. எனவே இந்த சாலையை செப்பனிட அதிகாரிகள் முன்வருவார்களா?