விக்கிரவாண்டி அருகே சூரப்பட்டு-அனந்தபுரம் சாலையில் இருந்து செம்மேடு கிராமத்துக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.