குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-08 10:23 GMT
கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தப்பாக்கம் விஜய லட்சுமி நகரில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்