கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு முதல் இரட்டை ரோடு வரை சாலை ஓரத்தில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மண் குவியல்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் மண்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.