பாதாள சாக்கடை பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-05 14:20 GMT

திருவாரூர் பழைய பஸ் நிலையம்-மயிலாடுதுறை செல்லும் பனகல் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் உள்வாங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் பள்ளம் தெரியாதபடி மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்