திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்கள் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?