குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-05 09:46 GMT

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் நடந்து செல்பவர்களும் தவறி விழும் நிலை உள்ளது. இது தவிர கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்