திருவள்ளூர் மாவட்டம் மோரை அண்ணாநகர் சந்திப்பு அருகில் உள்ள வல்லன் சாலை மக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் சேரும் சகதியுமாக இருந்து வருகிறது. சாலை முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால், அப்பகுதியின் வழியே வாகனங்கள் செல்ல வழியில்லாத வகையில் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலையை சரி செய்தால் பயனுள்ளதாக அமையும்.