கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, மார்க்கெட் சாலை, கோ-ஆப்ரேட்டிவ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் பலரும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.