தர்மபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் இருந்து செல்லும் தார் சாலை தடங்கம் மேம்பாலம் அருகே தர்மபுரி- சேலம் புறவழி சாலையுடன் இணைகிறது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை சேதமடைந்து உள்ளது. அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.