திண்டுக்கல் குடைப்பாறைபட்டி பகுதியில் உள்ள தெருக்களில் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அதேபோல் சாக்கடை கால்வாய்களும் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் முறையாக வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சாக்கடை கால்வாய்களை சீரமைப்பதுடன், சிமெண்டு சாலைகளை செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.