விருத்தாசலம் தாலுகா மணக்கொல்லை மேலகாலனி- ராமநாதபுரம் வரை மணல் சாலையாக உள்ளது. இந்ந சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகளும் அடிக்கடி அரக்கேறி வருகிறது. எனவே அப்பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.