தர்மபுரி- அரூர் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சில இடங்களில் ஒரு வழி பாதையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.