சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- மேலூரிலிருந்து மதுரை வரும் மெயின்ரோடு குறிப்பாக ரணசிங்கபுரம், கோட்டையூர், கருப்பூர், எஸ்.எஸ்.கோட்டை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகளில் அவதியடைவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.