புகார்பெட்டி எதிரொலி: ஆபத்தான பள்ளம் மூடப்பட்டது

Update: 2023-01-29 11:28 GMT

திருவாரூர் துர்க்காலயா சாலை நடுவே இருந்த பாதாள சாக்கடை குழியின் அருகே ஆபத்தான பள்ளம் ஒன்று இருந்தது. இதனை அறியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதியில் இருந்த ஆபத்தான பள்ளம் மூடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்