குளச்சல் நகராட்சி பீச் சந்திப்பில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.