திருவாரூர் பனகல் சாலையில் உள்ள குளம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் குளம் முழுவதும் பாசி மற்றும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக குளத்தில் உள்ள நீர் மாசடைந்து வருகிறது. மேலும்,குளத்தின் படித்துறைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.